Virat Kohli: பபுளுக்குலாம் வர முடியாது; பிசிசிஐ மீதான கோபத்தால் கோலி எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி

Published : Dec 13, 2021, 04:05 PM IST
Virat Kohli: பபுளுக்குலாம் வர முடியாது; பிசிசிஐ மீதான கோபத்தால் கோலி எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி

சுருக்கம்

தன்னை ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து தூக்கிய காரணத்தால் பிசிசிஐ மீது அதிருப்தியில் இருக்கும் விராட் கோலி, தென்னாப்பிரிக்க தொடருக்கான பயோ பபுளுக்கு செல்லவில்லை. அவரை தொடர்புகொள்ள முடியாததால் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது.  

இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக 2017ம் ஆண்டிலிருந்து இருந்துவந்த விராட் கோலி, டி20 உலக கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக நீடிக்கலாம் என அவர் நினைத்தார். ஆனால் டி20 மற்றும் ஒருநாள் அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக வராது என்பதால், கோலியை ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் விராட் கோலியோ, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக மறுத்துள்ளார். இதையடுத்து ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக மறுத்ததையடுத்து, பிசிசிஐ அதிரடியாக அவரை நீக்கிவிட்டு ரோஹித்தை நியமித்தது.

இதுகுறித்து விளக்கமளித்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என பிசிசிஐ கோலியிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் அதை கேட்காமல் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் செயல்படுவது சரியாக வராது என கருதியதால், தேர்வாளர்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஒரே கேப்டனை நியமித்தனர் என்றார் கங்குலி.

இந்த விவகாரத்தில் கோலியை பிசிசிஐ கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பது பலரது கருத்து. கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்தே, கோலியை யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினரே அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளார். அவரது சிறுவயது பயிற்சியாளரே, கோலியை தொடர்புகொள்ள முடியவில்லை; அவரது ஃபோன் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் கடந்த 12ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பயோ பபுளில் இணையுமாறு பிசிசிஐயால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ரோஹித் சர்மா, ரஹானே, புஜாரா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் பயோ பபுளில் இணைந்துவிட்ட நிலையில், விராட் கோலி மட்டும் பபுளுக்கு செல்லவில்லை.

வரும் 26ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதற்காக வரும் 16ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படும் இந்திய அணி, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, இங்கிருந்து கிளம்புவதற்கு முன் 3 நாட்கள் பபுளில் இருக்க வேண்டும். எனவே 12ம் தேதிக்குள்ளாக அனைவரும் பபுளுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் கோலி மட்டும் வரவில்லை. கோலியை பிசிசிஐ சார்பில் தொடர்புகொள்ள முயற்சித்தும் முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை கேப்டன்சியிலிருந்து நீக்கியதால் பிசிசிஐ மீது அதிருப்தியில் இருந்த விராட் கோலி, தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான பபுளில் இணையாதது அதிர்ச்சியளித்துள்ளது. அவர் பபுளில் இல்லாமல் தென்னாப்பிரிக்கா செல்வது சாத்தியமற்றது. எனவே அவர் தென்னாப்பிரிக்க தொடரில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

டெஸ்ட் அணிக்கு கோலி தான் கேப்டன். ரஹானே வகித்துவந்த துணை கேப்டன் பொறுப்பு, இந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கோலி தென்னாப்பிரிக்கா செல்லவில்லை என்றால், டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரோஹித்தே செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி