கோலினா என்ன பெரிய கொம்பா..? இந்திய அணியின் கேப்டனாவே இருந்தாலும் இப்படி பண்ணியிருக்க கூடாது.. கோலிக்கு ரூ.500 அபராதம்

By karthikeyan VFirst Published Jun 8, 2019, 10:09 AM IST
Highlights

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக இந்திய அணியின் கேப்டன் கோலி திகழ்கிறார். கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலக கோப்பை தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், குடிநீரை கார்களை கழுவ பயன்படுத்தியதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு குருக்ராம் மாநகராட்சி நிர்வாகம் ரூ.500 அபராதம் விதித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 

அப்படியிருக்கையில், டெல்லி-ஹரியானா எல்லை பகுதியில் குருக்ராமில் உள்ள விராட் கோலியின் வீட்டில், அவரது கார்களை கழுவுவதற்கு வேலையாட்கள் குடிநீரை பயன்படுத்தியுள்ளனர். விராட் கோலியின் 6 கார்களை கழுவ ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீரை வீணடிப்பதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் குருக்ராம் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அது உண்மைதான் என்று தெரிந்ததை அடுத்து விராட் கோலிக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

என்னதான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தாலும், குடிநீரை கார் கழுவ பயன்படுத்தக்கூடாது. 
 

click me!