பிசிசிஐ-யின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி.. தோனி அந்த லோகோவை பயன்படுத்த கூடாது!! ஐசிசி அதிரடி

By karthikeyan VFirst Published Jun 8, 2019, 9:45 AM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, தனது விக்கெட் கீப்பிங் க்ளௌசில் “இந்தியன் பாரா ஸ்பெஷல் ஃபோர்ஸஸ்”-ன் குறியீட்டை பயன்படுத்தினார். 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வெற்றியுடன் தொடரை தொடங்கியது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, தனது விக்கெட் கீப்பிங் க்ளௌசில் “இந்தியன் பாரா ஸ்பெஷல் ஃபோர்ஸஸ்”-ன் குறியீட்டை பயன்படுத்தினார். 

ஐசிசி விதிப்படி அரசியல், மதம், ராணுவம் சார்ந்த குறியீடுகளை வீரர்கள் எந்த வகையிலும் களத்தில் பயன்படுத்தக்கூடாது. அதனால் தோனியின் விக்கெட் கீப்பிங் க்ளௌசிலிருந்து அந்த குறியீட்டை நீக்க தோனிக்கு அறிவுறுத்துமாறு பிசிசிஐ-க்கு ஐசிசி அறிவுறுத்தியிருந்தது. 

இந்த விஷயத்தில் ரசிகர்களும் பிரபலங்களும் தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜீஜுவும் கூட் தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். பிசிசிஐ-யும் கூட தோனிக்கு ஆதரவாகவே இருந்தது. தோனி க்ளௌசில் பாலிடன் குறியீட்டை பயன்படுத்த ஐசிசி-யிடம் அனுமதி கோரியது பிசிசிஐ. 

ஆனால் ஐசிசி அனுமதியளிக்க மறுத்துவிட்டது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தோனியின் க்ளௌசில் இருந்த குறியீடு இனிமேல் ஆடும் போட்டிகளில் இருக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ஐசிசி தொடர்களில் இதுபோன்ற தனிப்பட்ட முறையிலான மெசெஜ் அல்லது லோகோ ஆகியவற்றை வீரர்களோ, அணி நிர்வாகிகளோ பயன்படுத்தக்கூடாது. எனவே இனிவரும் போட்டிகளில் தோனி அந்த லோகோவை பயன்படுத்தக்கூடாது என்று ஐசிசி தெரிவித்துவிட்டது. 
 

click me!