147 கிமீ வேகத்தில் நவ்தீப் சைனி போட்ட யார்க்கர்.. ஸ்டம்ப் காலியானதை கண்டு வியந்த விராட்.. வீடியோ

By karthikeyan VFirst Published Jan 8, 2020, 4:21 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், குணதிலகாவிற்கு 147 கிமீ வேகத்தில் நவ்தீப் சைனி வீசிய யார்க்கரை கண்டு கேப்டன் விராட் கோலி வியந்தார். 

இந்திய அணியில் முன்பெல்லாம் ஃபாஸ்ட் பவுலர்கள் 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசுவதெல்லாம் ஆச்சரியம். ஆனால் இப்போதைய பவுலர்கள் அசால்ட்டாக வீசுகின்றனர்.

ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா ஆகியோர் அவர்கள் கெரியரின் தொடக்கத்தில் நல்ல வேகத்தில் வீசினர். உமேஷ் யாதவ் 140 கிமீ வேகத்தில் வீசுபவர். அதன்பின்னர் பும்ரா வந்தார். பும்ரா நல்ல வேகம், துல்லியம், வேரியேஷன் ஆகிய மூன்றையும் கொண்டவர். 

பும்ராவுக்கு அடுத்து நவ்தீப் சைனி 140 கிமீ வேகத்தில் துல்லியமாக வீசுகிறார். நவ்தீப் சைனியின் வேகம் மிரட்டலாக இருக்கிறது. நல்ல ஃபிட்னெஸுடன் இருப்பதால் அவரால் அதிவேகமாக வீசமுடிகிறது. டி20 உலக கோப்பைக்கான அணியில் தன்னை ஒதுக்கமுடியாத அளவிற்கு, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு, தனது மிரட்டலான பவுலிங்கின் மூலம் அனைவரையும் கவர்வதுடன், விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார். 

பந்தின் சீமை பயன்படுத்தும் முறையை, அந்த விஷயத்தில் வல்லவரான ஷமியிடம் இருந்து கற்றுக்கொண்டாரென்றால், அவரது பவுலிங் இன்னும் மேம்படும். இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதையும் சைனி தான் வென்றார். 

குணதிலகா மற்றும் ராஜபக்சா ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் நவ்தீப் சைனி வீழ்த்தினார். குணதிலகாவை 147 கிமீ வேகத்தில் யார்க்கர் வீசி மிடில் ஸ்டம்ப்பை தாக்கினார் சைனி. அந்த பந்தை குணதிலகாவால் எதிர்கொள்ளவே முடியவில்லை. நிராயுதபாணியாக நின்ற குணதிலகா ஸ்டம்பை பறிகொடுத்து நடையை கட்டினார். சைனியின் வேகத்தையும் துல்லியத்தையும் கண்டு கேப்டன் விராட் கோலி வியந்து போனார். அந்த வீடியோ இதோ.. 

click me!