இப்போதே ஓய்வு குறித்து அறிவித்த விராட் கோலி

By karthikeyan VFirst Published Feb 20, 2020, 11:50 AM IST
Highlights

விராட் கோலி ஏதாவது ஒரு ஃபார்மட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்துள்ளார். 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக இந்திய அணியின் கேப்டன் கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, பல பேட்டிங் சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். 

சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் விராட் கோலி திகழ்கிறார். இந்திய அணிக்காக மூன்றுவிதமான ஃபார்மட்டிலும் வெற்றிகளை குவித்து கொடுத்து வருகிறார். இந்திய அணிக்கு அதிகமான டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையை ஏற்கனவே படைத்துவிட்டார். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வெற்றிகளை குவித்து வருகிறது. 31 வயதான விராட் கோலி, மிகவும் ஃபிட்டான வீரர். உடற்தகுதியில், அணி வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர். 

நடப்பு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகளுடன் இந்திய அணி தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் வென்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் கோலோச்சும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. இந்நிலையில், நாளை வெலிங்டனில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

இந்நிலையில், அதற்கு முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விராட் கோலியிடம் மூன்று ஃபார்மட்டிலும் தொடர்ச்சியாக ஓய்வேயில்லாமல் ஆடிவரும் விராட் கோலிக்கு ஏதேனும் ஒரு ஃபார்மட்டிலிருந்து ஓய்வுபெறும் ஐடியா குறித்து கேட்கப்பட்டது. 

இதையடுத்து அதுகுறித்து பேசிய விராட் கோலி,  என்னுடைய 34-35 வயதில் என்னுடைய உடல் அனைத்து ஃபார்மட்டிலும் ஆட ஒத்துழைக்குமா என தெரியவில்லை. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அனைத்து ஃபார்மட்டிலும் நான் ஆடுவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே அடுத்த 3 ஆண்டுகளுக்கு எல்லா விதமான போட்டிகளிலும் கண்டிப்பாக ஆடுவேன். அதன்பின்னர் ஏதாவது ஒரு ஃபார்மட்டிலிருந்து ஓய்வுபெறுவதுகுறித்து பார்த்து கொள்ளலாம்.

நான் இன்னும் முழு தீவிரத்துடன் ஆடிக்கொண்டிருக்கிறேன். அடுத்த 3 ஆண்டுகளுக்கு எனது பங்களிப்பு அணிக்கு கண்டிப்பாக தேவை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நான் இன்னும் 3 ஆண்டுகளாவது ஆடினால்தான், இந்திய அணி அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கான மாற்றத்தை வலுவாக அமைத்துக்கொடுக்க முடியும். கடந்த 5-6 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அதுமாதிரியான மாற்றம் நிகழும்போது அது சிறப்பாக அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோலி தெரிவித்தார். 

எனவே அடுத்த 3 ஆண்டுகளுக்கு கண்டிப்பாக கோலி அனைத்து ஃபார்மட்டிலும் ஆடுவது உறுதி. அதன்பின்னர் ஏதாவது ஒரு ஃபார்மட்டில் இருந்து மட்டும் ஓய்வுபெற வாய்ப்புள்ளது. அதுவும் சரியாக 3 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க வாய்ப்பில்லை. 31 வயதான கோலி, சிறந்த உடற்தகுதியை பெற்ற வீரர். எனவே (குறைந்தது ஏதாவது ஒரு ஃபார்மட்டிலாவது) அடுத்த 6 ஆண்டுகளுக்கு கண்டிப்பாக ஆடுவார். 

Also Read - இந்திய அணியின் இளம் வீரர்களை கண்டு தொடை நடுங்கும் நியூசிலாந்து சீனியர் வீரர்

இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு(2021) என தொடர்ச்சியாக 2 ஆண்டுகளில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. அதைத்தொடர்ந்து 2023ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை நடக்கவுள்ளது. எனவே இந்த மூன்றையும் வெல்லும் முனைப்பில் விராட் கோலி, தான் தயாராகிவருவதோடு, ஒரு கேப்டனாக அணியையும் தயார் செய்து கொண்டிருக்கிறார். 
 

click me!