ரோஹித்தின் சாதனையை காலி செய்த கோலி.. பாண்டிங்கின் சாதனை சமன்..! மீண்டும் சாதனைகளை குவிக்க தொடங்கிய கிங் கோலி

By karthikeyan VFirst Published Sep 8, 2022, 9:54 PM IST
Highlights

ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசிய விராட் கோலி, ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி,  சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியிருந்த விராட் கோலி, 71வது சதத்தை அடிக்க முடியாமல் சுமார் 3 ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் திணறினார். கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த கோலி, அதன்பின்னர் சுமார் 3 ஆண்டுகளாக ஒரு சதம் கூட  அடிக்க முடியாமல் திணறியதுடன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இதையும் படிங்க - Asia Cup: அவரை எடுக்காததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்! ராகுல் டிராவிட், ரோஹித்தை விளாசிய ரவி சாஸ்திரி

இந்த ஆசிய கோப்பையில் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கிற்கு எதிராக 2 அரைசதங்களை விளாசி ஃபார்முக்கு வர ஆரம்பித்த கோலி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தினார்.

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் ஆடியது. இந்திய அணியின் தொடக்க வீரராக இறங்கிய விராட் கோலி தொடக்கம் முதலே அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசிய விராட் கோலி, முதல் சதத்திலேயே  ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.

3 ஆண்டுக்கு பிறகு முதல் சதமடித்த விராட் கோலியின் 71வது சர்வதேச சதம் இது. இந்த சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்து, மீண்டும் சாதனை பட்டியலை தொடங்கியுள்ளார் கோலி.

இந்த போட்டியில் 122 ரன்களை குவித்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மவின் (118 vs இலங்கை) சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 71வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி, ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கும் நிலையில், 2வது இடத்தை ரிக்கி பாண்டிங்குடன் பகிர்ந்துள்ளார் கோலி.

இதையும் படிங்க - சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார் கோலி! 3 ஆண்டுக்கு பிறகு முதல் சதம்.. ஆஃப்கானுக்கு கடின இலக்கு

ரிக்கி பாண்டிங் 668 சர்வதேச இன்னிங்ஸ்களில் 71சதங்களை விளாசியுள்ளார். விராட் கோலி 522 இன்னிங்ஸ்களில் 71 சதங்களை விளாசி, 2ம் இடத்தை பாண்டிங்குடன் பகிர்ந்துள்ளார். 
 

click me!