11 ஆண்டுகளுக்கு பின் திரும்பிய வரலாறு.. மீண்டும் அரையிறுதியில் மோதும் விராட் - வில்லியம்சன்.. பழிதீர்ப்பாரா வில்லியம்சன்..?

By karthikeyan VFirst Published Jul 8, 2019, 1:04 PM IST
Highlights

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணியும் முதல் அரையிறுதி போட்டியில் நாளை மோதுகின்றன. 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில், நாளை அரையிறுதி போட்டிகள் தொடங்குகின்றன.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணியும் முதல் அரையிறுதி போட்டியில் நாளை மோதுகின்றன. 

2008ல் நடந்த அண்டர் 19 உலக கோப்பை அரையிறுதியிலும் விராட் தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தான் மோதின. அந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இறுதி போட்டியிலும் வென்று கோப்பையை வென்றது. 

11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரலாறு திரும்பியுள்ளது. மீண்டும் இவர்கள் இருவரின் தலைமையிலான அணிகள் அரையிறுதியில் நேருக்கு நேர் மோதுகின்றன. மறுபடியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை விராட் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறுமா? அல்லது 11 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அடிக்கு வில்லியம்சன் தலைமையிலான அணி பதிலடி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

click me!