விண்டேஜ் ஹெர்ஷல் கிப்ஸின் காட்டடி பேட்டிங்! இந்தியா மஹாராஜாஸ்க்கு கடின இலக்கை நிர்ணயித்த வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ்

Published : Jan 27, 2022, 10:01 PM IST
விண்டேஜ் ஹெர்ஷல் கிப்ஸின் காட்டடி பேட்டிங்! இந்தியா மஹாராஜாஸ்க்கு கடின இலக்கை நிர்ணயித்த வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ்

சுருக்கம்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஹெர்ஷல் கிப்ஸின் காட்டடியால் 20 ஓவரில் 228 ரன்களை குவித்த வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி, 229 ரன்கள் என்ற கடின இலக்கை இந்தியா மஹாராஜாஸ்க்கு நிர்ணயித்துள்ளது.  

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் கலந்துகொண்டு ஆடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஓமனில் நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் மற்றும் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.

டாஸ் வென்ற இந்தியா மஹாராஜாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் கெவின் பீட்டர்சன் 5 பந்தில் 11 ரன் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மஸ்டர்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவரும் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கி அடித்து ஆடினார் ஹெர்ஷல் கிப்ஸ்.

இன்றைய கிப்ஸின் பேட்டிங், விண்டேஜ் கிப்ஸின் பேட்டிங்கை கண்முன் நிறுத்தியது. அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஹெர்ஷல் கிப்ஸ், 46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவித்த நிலையில், 11 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். கெவின் ஓ பிரயன் 14 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 34 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, 20 ஓவரில் 228 ரன்களை குவித்த வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி, 229 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை இந்தியா மஹாராஜாஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி!
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்