குடிபோதையில் காரை ஓட்டிய வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது..! ஜாமீனில் வெளிவந்தார்

Published : Feb 28, 2022, 03:25 PM IST
குடிபோதையில் காரை ஓட்டிய வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது..! ஜாமீனில் வெளிவந்தார்

சுருக்கம்

மும்பையில் மதுபோதையில் கார் ஓட்டிய வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவிடப்பட்டார்.  

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. 1991ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வினோத் காம்ப்ளி, 2000ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 1084 மற்றும் 2477 ரன்கள் அடித்துள்ளார்.  

2000ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் வினோத் காம்ப்ளி ஆடவில்லை. சச்சினின் நெருங்கிய நண்பராக இருந்தாலும், அவரால் சச்சின் அளவிற்கு இந்திய அணியில் ஜொலிக்க முடியவில்லை. 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட, 50 வயதான வினோத் காம்ப்ளி தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் சிக்கிவரும் நிலையில், இப்போது குடிபோதையில் கைதாகி வெளியாகியுள்ளார். 

மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்துவரும் வினோத் காம்ப்ளி, மதுபோதையில் காரை வீட்டிலிருந்து வெளியே எடுத்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான ரமேஷ் பவாரின் மனைவியின் கார் மீது மோதியது. அதன்பின்னர் அபார்ட்மெண்ட் கேட்டின் மீதும் கார் மோதியது. இந்த சம்பவம் தொடர்பாக கேட்டபோது, வாட்ச்மேன் மற்றும் ரமேஷ் பவாரின் மனைவியுடன் குடிபோதையில் இருந்த வினோத் காம்ப்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு, காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

இதுதொடர்பாக ரமேஷ் பவாரின் மனைவி அளித்த புகாரின்பேரில், குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார் வினோத் காம்ப்ளி. பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஏற்கனவே, வினோத் காம்ப்ளியும் அவரது மனைவியும் சேர்ந்து வீட்டு பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருக்கிறார் வினோத் காம்ப்ளி.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!