விஜய் ஹசாரே காலிறுதிக்கு தகுதிபெறாத தமிழ்நாடு அணி..! காலிறுதி போட்டி விவரங்கள்

Published : Mar 04, 2021, 08:56 PM IST
விஜய் ஹசாரே காலிறுதிக்கு தகுதிபெறாத தமிழ்நாடு அணி..! காலிறுதி போட்டி விவரங்கள்

சுருக்கம்

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டிக்கு தமிழ்நாடு அணி தகுதிபெறவில்லை. காலிறுதியில் மோதும் அணிகள் மற்றும் போட்டி விவரங்களை பார்ப்போம்.  

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு அணி, விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி சுற்றுக்குக்கூட முன்னேறவில்லை.

கர்நாடகா, கேரளா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், காலிறுதி போட்டி விவரங்களை பார்ப்போம். 

மார்ச்  8ம் தேதி 2 காலிறுதி போட்டிகளும், மார்ச்  9ம் தேதி 2 காலிறுதி போட்டிகளும் நடக்கின்றன. மார்ச் 8ம் தேதி, கர்நாடகா மற்றும் கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி, குஜராத் மற்றும் ஆந்திரா அணிகளுக்கு இடையேயான போட்டி ஆகிய 2 போட்டிகள் நடக்கின்றன.

மார்ச் 9ம் தேதி நடக்கும் ஒரு காலிறுதி போட்டியில் மும்பை மற்றும் சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் உத்தர பிரதேச அணியுடன், டெல்லி மற்றும் உத்தரகண்ட் அணிகளுக்கு இடையே நடக்கும் பிரிலிமினரி காலிறுதி போட்டியில் வெல்லும் அணி மோதும்.

காலிறுதி போட்டிகளில் வெல்லும் அணிகள், மார்ச் 11ம் தேதி நடக்கும் அரையிறுதி போட்டிகளில் மோதும். அரையிறுதியில் வெல்லும் 2 அணிகள் மார்ச் 14ம் தேதி நடக்கும் இறுதி போட்டியில் மோதும்.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?