நேரா அடித்த டிவில்லியர்ஸ்.. பார்க்காமலே அடித்த பவுலர்.. செம வீடியோ

Published : Aug 31, 2019, 12:58 PM IST
நேரா அடித்த டிவில்லியர்ஸ்.. பார்க்காமலே அடித்த பவுலர்.. செம வீடியோ

சுருக்கம்

227 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மிடில்செக்ஸ் அணி, இயன் மோர்கனின் காட்டடியால், 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் நடந்துவரும் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சோமர்செட் அணியின் கேப்டன் டாம் ஆபெல் சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 101 ரன்களை குவித்தார். தொடக்க வீரர் டாம் பாண்ட்டன் 62 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரின் அதிரடியால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 226 ரன்களை குவித்தது. 

227 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மிடில்செக்ஸ் அணி, இயன் மோர்கனின் காட்டடியால், 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது. மோர்கன் 29 பந்துகளில் 83 ரன்களை குவித்து மிரட்டினார். 

இந்த போட்டியில் மிடில்செக்ஸ் வீரர் ஹஃபீஸை அபாரமாக ரன் அவுட் செய்தார் சோமர்செட் வீரர் வாண்டெர் மெர்வி. வாண்டெர் மெர்வி வீசிய பந்தை டிவில்லியர்ஸ் அவருக்கு நேராக அடிக்க, அதற்குள்ளாக பவுலிங் முனையில் நின்ற பேட்ஸ்மேனான முகமது ஹஃபீஸ், ரன் ஓடுவதற்காக க்ரீஸை விட்டு வெளியேறினார். தனக்கு நேராக வந்த பந்தை பிடித்த வாண்டெர் மெர்வி, பின்னால் திரும்பி ஸ்டம்ப்பை பார்க்கமலேயே கரெக்ட்டா ஸ்டம்பில் அடித்து ஹஃபீஸை ரன் அவுட் செய்தார். சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோ இதோ.. 

PREV
click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!