ஆஸ்திரேலிய அணிக்கு அடி மேல் அடி.. 2 வீரர்கள் காயம்.. மாற்று வீரர்களுக்கு அழைப்பு

By karthikeyan VFirst Published Jul 8, 2019, 11:14 AM IST
Highlights

வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், ஷான் மார்ஷுக்கு அடுத்து மேலும் 2 ஆஸ்திரேலிய வீரர்கள் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. 
 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில், நாளை அரையிறுதி போட்டிகள் தொடங்குகின்றன.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. 

வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், ஷான் மார்ஷுக்கு அடுத்து மேலும் 2 ஆஸ்திரேலிய வீரர்கள் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. 

ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் காயமடைந்ததால் அவர் உலக கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹேண்ட்ஸ்கம்ப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உஸ்மான் கவாஜா மற்றும் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய இருவரும் காயத்தால் அவதிப்பட்டுவருகின்றனர். அவர்கள் இருவருக்கும் நேற்று ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பின்னர் தான் அவர்கள் தொடரில் தொடர்வதா இல்லையா என்பது குறித்து முடிவுசெய்யப்படும். 

எனினும் முன்னெச்சரிக்கையாக மேத்யூ வேட் மற்றும் மிட்செல் மார்ஷுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய ஏ அணியில் ஆடுவதால் இங்கிலாந்தில் தான் உள்ளனர். எனவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

click me!