டீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்

By karthikeyan VFirst Published Oct 21, 2019, 3:55 PM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் டீன் எல்கருக்கு தலையில் பலத்த அடி விழுந்தது. 
 

ராஞ்சியில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 497 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஃபாலோ ஆன் பெற்ற தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. டி காக்கை இரண்டாவது ஓவரிலேயே உமேஷ் யாதவ் வீழ்த்த, அதன்பின்னர் ஹம்ஸா, டுப்ளெசிஸ், பவுமா ஆகிய மூவரையும் ஷமி வீழ்த்தினார். 22 ரன்களுக்கே தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், மறுமுனையில் அவுட்டாகாமல் நிலைத்து நின்ற எல்கர் மண்டையில் அடிவாங்கி ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். 

உமேஷ் யாதவ் வீசிய பந்தின் லெந்த்தை தவறாக கணித்த எல்கர், அந்த பந்து பவுன்ஸராக வரும் எதிர்பார்த்து குணிந்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரியளவில் மேலெழும்பவில்லை. நார்மலான லெந்த்தில் தான் வந்தது. லெந்த்தை சரியாக கணிக்காமல் குனிந்ததால் ஹெல்மெட்டில் பலமாக அடித்தது பந்து. இதையடுத்து நிலைதடுமாறி கீழே உட்கார்ந்தார் எல்கர். எல்கரால் தொடர்ந்து ஆடமுடியாததை அடுத்து, டி பிரேக் முன்கூட்டியே விடப்பட்டது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்று(சப்ஸ்டிடியூட்) பேட்ஸ்மேன் களமிறங்கலாம் என்று ஏற்கனவே ஐசிசி விதி மாற்றப்பட்டுவிட்டது. ஆஷஸ் தொடரில் கூட, ஸ்மித்துக்கு பதிலாக மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார். எனவே எல்கரால் ஆடமுடியாததால் அவருக்கு பதிலாக டி ப்ருய்ன் களமிறங்கவுள்ளார். 

தென்னாப்பிரிக்க அணியின் ஐந்தாவது விக்கெட்டாக கிளாசனும் அவுட்டாகிவிட்டதால், இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால், அதிகபட்சம் நாளை காலையுடன் போட்டி முடிந்துவிடும்.
 

click me!