TSPL – மார்ச் 22ல் 2ஆவது அணிக்கான போட்டி ஆரம்பம்!

TSPL 2nd Zone Match : தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி திருச்சியில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 2ஆவது அணிக்கான போட்டி வரும் 22ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

TSPL Tamilnadu Street Premier League 2nd Zone Match Will be Held on 22nd march at PB College of Engineering in Tamil rsk

TSPL 2nd Zone Match : ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் தொடர் போன்று இப்போது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் ஒரு முனைப்போடு தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (TSPL) தொடர் நடைபெற்று வருகிறது. Street Cricket Development Federation இந்த TSPL போட்டியை நடத்தி வருகிறது. இந்த கிரிக்கெட் பொட்டியானது டென்னிஸ் பால் கொண்டு விளையாடப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த போட்டியானது வெறும் 10 ஓவர்கள் கொண்ட போட்டி. கடந்த 5 ஆம் தேதி திருச்சியிலுள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் இந்தப் போட்டி தொடங்கியது. இந்த கல்லூரியில் ஏற்கனவே 32 நாக் அவுட் போட்டி நடத்தப்பட்ட நிலையில் இதில் தொட்டியம் பாய்ஸ் அணி வெற்றி பெற்றது. கடந்த 8ஆம் தேதி இந்தப் போட்டி நடந்தது. இதில் தான் தொட்டியம் பாய்ஸ் வெற்றி பெற்றது. மொத்தமாக 32 அணிகள் இடம் பெற்றன. 2ஆவது அணிக்கான தேர்வு வரும் 22ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

சென்னை பிபி இன்ஜினியரிங் கல்லூரியில் இந்த போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியானது நாக் அவுட் போட்டியில் பங்கேற்கும். 2வது மண்டலத்துக்கான நாக் அவுட் போட்டி வரும் ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது. இப்படி ஒவ்வொரு மண்டலத்துக்கான அணி தேர்வு செய்யப்பட்டு கடைசியில் இறுதிப் போட்டி நடத்தப்படும். வரும் மே மாதம் இறுதியில் TSPL இறுதிப் போட்டி நடத்தப்படும். இந்த TSPL போட்டியில் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியும், இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். ஏலத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படும். ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் போன்று TSPL தொடரும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ரசிகர்களும் இந்தப் போட்டியை கொண்டாட தொடங்கியிருக்கின்றனர்

Latest Videos

click me!