#CPL2021 பொல்லார்டு, டிம் சேஃபெர்ட்டின் கடைசி நேர காட்டடியால் ஜமைக்கா அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த டிகேஆர்

By karthikeyan VFirst Published Sep 7, 2021, 9:50 PM IST
Highlights

பொல்லார்டு மற்றும் டிம் சேஃபெர்ட்டின் கடைசி நேர அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 160 ரன்கள் அடித்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, 161 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி:

லியோனர்டோ ஜூலியன், லெண்டல் சிம்மன்ஸ், காலின் முன்ரோ, பொல்லார்டு(கேப்டன்), டேரன் பிராவோ, டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், காரி பியெரெ, அகீல் ஹுசைன், ரவி ராம்பால், அலி கான்.

ஜமைக்கா தல்லாவாஸ் அணி:

கென்னார் லெவிஸ்(விக்கெட் கீப்பர்), ஷமர் ப்ரூக்ஸ், ஹைதர் அலி, ரோவ்மன் பவல்(கேப்டன்), ஜேசன் முகமது, இமாத் வாசிம், கார்லஸ் பிராத்வெயிட், ஆண்ட்ரே ரசல், மிகேல் ப்ரிட்டோரியஸ், க்றிஸ் க்ரீன், வீராசாமி பெர்மால்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டிகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஜூலியன் 25 பந்தில் 17 ரன்களும், லெண்டல் சிம்மன்ஸ் 39 பந்தில் 42 ரன்களும் அடித்தனர். காலின் முன்ரோ 17 பந்தில் 14 ரன்களும், டேரன் பிராவோ 14 பந்தில் 14 ரன்களும் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, 17.2 ஓவரில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது ஜமைக்கா அணி.

அதன்பின்னர் கேப்டன் பொல்லார்டும் டிம் சேஃபெர்ட்டும் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். டிம் சேஃபெர்ட் வெறும் 8 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 24 ரன்களையும், பொல்லார்டு 18 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 39 ரன்களையும் விளாச, 20 ஓவரில் 160 ரன்களை குவித்த டிகேஆர் அணி, 161 ரன்கள் என்ற இலக்கை ஜமைக்கா அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!