மைதானத்தில் கெத்து.. வருமானத்தில் மாஸ்.. டாப் 5 பணக்கார கிரிக்கெட் வீராங்கனைகள்.. 3 இந்தியர்களுக்கு இடம்!

Published : Aug 31, 2026, 09:37 PM IST
Top 5 Richest Women Cricketers

சுருக்கம்

Top 5 Richest Women Cricketers: உலகளவில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 5 பணக்கார கிரிக்கெட் வீராங்கனைகள் பட்டியலில் எலிஸ் பெர்ரி முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பிடித்த 3 இந்திய வீராங்கனைகள் யார்? யார்? என பார்ப்போம்.

கடந்த சில ஆண்டுகளாக, மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. வீராங்கனைகளின் வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. போட்டிகளில் விளையாடுவது மட்டுமன்றி, பிராண்ட் விளம்பரங்கள், வெளிநாட்டு லீக் போட்டிகள், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். அதனடிப்படையில், 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் டாப் 5 பணக்கார பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் யாரென்று காண்போம்.

1. எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) – ரூ.120 கோடி

ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 120 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தம், மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) மற்றும் அடிலாஸ் (Adidas) போன்ற முன்னணி பிராண்ட் ஒப்பந்தங்களே இவரது முக்கிய வருமான ஆதாரங்களாகும்.

2. மெக் லானிங் (ஆஸ்திரேலியா) – ரூ.75 கோடி

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மெக் லானிங் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 75 கோடி ரூபாய் ஆகும். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதிலும், டி20 லீக் போட்டிகள் மற்றும் வர்ணனை மூலம் தொடர்ந்து வருவாய் ஈட்டி வருகிறார்.

Suryakumar Yadav: 'டீம்ல இருந்து தூக்குனதும் ஷாக் ஆகிட்டேன்' - சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!

3. மிதாலி ராஜ் (இந்தியா) – ரூ.43 கோடி

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் 'லேடி சூப்பர்ஸ்டார்' மிதாலி ராஜ், இப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஓய்வுக்குப் பிறகும் இவரது சந்தை மதிப்பு குறையவில்லை. சுமார் 43 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், இந்தியாவின் முதன்மைப் பணக்கார பெண் கிரிக்கெட்டராகத் திகழ்கிறார். திரைப்படங்கள், பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் ஊடக நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு வழிகளில் இவருக்கு வருமானம் கிடைக்கிறது.

4. ஸ்மிருதி மந்தனா (இந்தியா) – ரூ.35 கோடி

இந்தியாவின் நட்சத்திர பேட்டர் ஸ்மிருதி மந்தனா 4-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய் ஆகும். மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் அதிக சம்பளம் பெறும் இவர், பல முன்னணி பிராண்டுகளின் தூதராகவும் செயலாற்றி வருகிறார். சமூக ஊடகங்களிலும் இவருக்குப் பெரும் வரவேற்பு உள்ளது.

WTC Final Race: ஆஸி, தென்னாப்பிரிக்கா முன்னிலை.. இந்தியாவுக்கு இன்னும் சான்ஸ் இருக்கா?

5. ஹர்மன்ப்ரீத் கவுர் (இந்தியா) – ரூ.26 கோடி

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 5-ஆம் இடத்தில் உள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 26 கோடி ரூபாய். பிசிசிஐ ஒப்பந்தம் தவிர, வெளிநாட்டு லீக் போட்டிகள் மற்றும் விளம்பரங்கள் மூலமாகவும் கணிசமாகச் சம்பாதிக்கிறார்.

மொத்தத்தில், உலகின் டாப் 5 பணக்கார பெண் கிரிக்கெட்டர்கள் பட்டியலில் மூன்று பேர் இந்திய வீராங்கனைகளாக இருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். மகளிர் கிரிக்கெட்டில் ஒரு பெரிய பொருளாதாரப் புரட்சி ஏற்பட்டிருப்பதற்கு இந்தப் புள்ளிவிவரங்களே சான்றாகும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suryakumar Yadav: 'டீம்ல இருந்து தூக்குனதும் ஷாக் ஆகிட்டேன்' - சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!
WTC Final Race: ஆஸி, தென்னாப்பிரிக்கா முன்னிலை.. இந்தியாவுக்கு இன்னும் சான்ஸ் இருக்கா?