இன்று தொடங்குகிறது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சீசன் 4 ! முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்

By Selvanayagam PFirst Published Jul 19, 2019, 11:17 AM IST
Highlights

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 4 ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
 

சூதாட்ட பிரச்சனை காரணமாக ஐபிஎல் தொடரில் தமிழக அணியான சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டாண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல்-லில் சென்னை அணி இல்லாததால் சோர்வடைந்தனர். 

இப்படியே போனால் ரசிகர்கள் ஏங்கி போய்விடுவார்கள் என்று எண்ணிய தமிழக கிரிக்கெட் வாரியம், தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) என்ற பெய ரில் டி-20 தொடரை 2016-ஆம் ஆண்டு தொடங்கியது. 

தமிழக வீரர்கள் மட்டும் கலந்துகொள்ளும் இந்த தொடர் ஐபி எல் தொடரைப் போல ஏல முறையில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதுவரை 3 சீசன் நிறைவடைந்த நிலையில், 4-வது சீசன் இன்று  தொடங்குகிறது. 

தொடக்க ஆட்டத்தில் சென்னை (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) - திண்டுக்கல் (டிராகன்ஸ்) அணிகள் மோதுகின்றன.  ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடை பெறும் இந்த தொடரில்  சீசெம் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (சென்னை), டூட்டி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி), திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், ரூபி திருச்சி  வாரியர்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாளான இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. நத்தத்தில் உள்ள மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது

8 அணிகளுக்கும் 45 வீரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளு டன் தலா ஒரு முறை மோத வேண்டும் (மொத்தம் 32 ஆட்டங்கள்). லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் (புள்ளிகள் அடிப்படையில்) அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

கடந்த 2016 - தூத்துக்குடி (டூட்டி பேட்ரியாட்ஸ்) ,  2017 - சென்னை (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்)  மற்றும் கடந்த ஆண்டு 2018 - மதுரை (பாந்தர்ஸ்) அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.
கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் வழங்கப்படும்.

click me!