என் பவுலிங்கை அடித்து நொறுக்கிவிட்டு வந்து பேசினார் ராகுல் டிராவிட்.! வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் நெகிழ்ச்சி

By karthikeyan VFirst Published Jul 19, 2020, 4:37 PM IST
Highlights

இந்திய வீரர்களின் நற்பண்புகள் மற்றும் அடக்கம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் டினோ பெஸ்ட் நினைவுகூர்ந்து நெகிழ்ந்துள்ளார். 
 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் டினோ பெஸ்ட். வலது கை ஃபாஸ்ட் பவுலரான டினோ பெஸ்ட், 2003ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை ஆடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளிலும் 26 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். 

2004ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியை ஆடிய டினோ பெஸ்ட், இந்தியாவுக்கு எதிராக முதல்முறையாக 2005ம் ஆண்டு நடந்த முத்தரப்பு தொடரில் ஆடினார். இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரில் தான் இந்தியாவுக்கு எதிராக முதன் முறையாக ஆடினார். அப்போது நடந்த சம்பவங்கள் மற்றும் இந்திய வீரர்களுடனான பழக்கம், இந்திய வீரர்களின் நற்பண்புகள் குறித்து டினோ பெஸ்ட் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள டினோ பெஸ்ட், 2005ம் ஆண்டு இந்தியன் ஆயில் கோப்பை தொடரில் தான் நான் முதல் முறையாக இந்திய அணிக்கு எதிராக ஆடினேன். ராகுல் டிராவிட்டுக்கு பந்துவீசியது எனக்கு சிறந்த அனுபவம். எனது பவுலிங்கில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசினார். அந்த போட்டிக்கு பின்னர் ராகுல் டிராவிட்டுடனான உரையாடல் சிறப்பானது. 

யங் மேன் என்று என்னை அழைத்த டிராவிட், என்னிடம், உங்கள் எனர்ஜி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதை தொடர்ந்து அதிகப்படுத்து. உனது பவுலிங்கில் சில பவுண்டரிகள் போய்விட்டது என்பதற்காக நிறுத்திவிடாதே என்றார் டிராவிட். டிராவிட் மிகவும் அடக்கமான மற்றும் நல்ல மனிதர். இந்திய வீரர்களிடமிருந்து நிறைய அன்பை பெற்றிருக்கிறேன். யுவராஜ் சிங் எனக்கு ஒருமுறை பேட் கொடுத்தார்.

இந்திய வீரர்களுடனான எனது அனுபவத்திலிருந்து, அவர்கள் மிக அருமையானவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள். 1.5 பில்லியன் ரசிகர்களை கொண்டவர்கள் என்ற ஆணவமெல்லாம் இல்லாமல், மிகவும் பணிவாக பழகுவார்கள். இந்திய வீரர்கள் மரியாதையானவர்கள். கிரிக்கெட்டை நேசிப்பவர்கள்; அவர்களுடன் ஆடும்போது எப்போதுமே நல்ல அதிர்வலைகள் தான் இருக்கும் என டினோ பெஸ்ட் புகழ்ந்துள்ளார். 

click me!