ஜோஃப்ரா ஆர்ச்சர் மீது கடும் நடவடிக்கை..! இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 18, 2020, 10:39 PM IST
Highlights

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத ஜோஃப்ரா ஆர்ச்சர் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 

கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாத மத்தியிலிருந்து கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் கிரிக்கெட் போட்டி நடந்துவருகிறது.

4 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டி நடப்பது நல்ல விஷயம். கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு கருதி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிகளுக்குட்பட்டு நடக்க வேண்டும். ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறிவிட்டார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலரான ஆர்ச்சர், அந்த அணியின் முக்கியமான வீரராக திகழ்கிறார். இந்நிலையில், தனது நலன் மட்டுமல்லாது, மற்ற வீரர்களின் பாதுகாப்பும் அடங்கிய விஷயத்தில், ஒழுக்கமாக நடந்துகொள்ளாமல் கொரோனா நெறிமுறைகளை மீறி நடந்துகொண்டதால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படும். 

தனது தவறை ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒப்புக்கொண்டார். தனது அணிக்கும் சிக்கலை ஏற்படுத்திவிட்டதாக வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், அவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அவருக்கு அபராதமும் விதித்துள்ளது. ஆனால் எவ்வளவு தொகை அபராதம் விதிக்கப்பட்டது என்பது சொல்லப்படவில்லை. ஆனால் அபராதத்துடன் கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஒழுக்கக்குறைபாட்டுடன் இருந்தால், திறமையான வீரராகவே இருந்தாலும் கிரிக்கெட்டில் நீண்ட காலத்திற்கு நட்சத்திர வீரராக ஜொலிக்க முடியாது என்பதை உணர்ந்து இனிமேலாவது ஆர்ச்சர் நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.
 

click me!