ஸ்மார்ட்டா பொறிவைத்த கோலி.. சிக்காத ஜாமிசன்..! ஜாமிசனுக்கு டிம் சௌதி புகழாரம்

By karthikeyan VFirst Published May 31, 2021, 2:56 PM IST
Highlights

விராட் கோலி வைத்த பொறியில் ஜாமிசன் சிக்காததற்கு அவரை புகழ்ந்துள்ளார் டிம் சௌதி.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் ஜூன் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. முதல் முறையாக நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஃபைனலில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலுமே இரு அணிகளும் சமபலம் வாய்ந்த வலுவான அணிகள் மட்டுமல்லாது, இரு அணிகளுமே விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் என்ற மிகச்சிறந்த கேப்டன்சியின் கீழ் ஆடுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் டியூக் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. ஃபைனலில் நியூசிலாந்து அணியில் ஆடவுள்ள ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன் ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடிய நிலையில், அவரை வலைப்பயிற்சியில் டியூக் பந்தில் பந்துவீச முடியுமா என விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தயாராகும் விதமாக தன்னை பந்துவீச வைத்து, தனது பவுலிங்கை கோலி தெரிந்துகொள்ள நினைக்கிறார் என்பதை புரிந்துகொண்ட கைல் ஜாமிசன், கோலியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இந்த தகவலை ஆர்சிபி அணியில் ஆடிய மற்றொரு நியூசிலாந்து வீரரான டேனியல் கிறிஸ்டியன் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து பேசியுள்ள நியூசிலாந்து சீனியர் ஃபாஸ்ட் பவுலர் டிம் சௌதி, கோலி - ஜாமிசன் இடையேயான சம்பவம் உண்மைதான் என்பது எனக்கு தெரியும். எந்தவொரு பேட்ஸ்மேனாக இருந்தாலும், அப்படி கேட்டால் அதுதான் பதிலாக இருக்கும். விராட் கோலி ஜாமிசனுக்கு ஸ்மார்ட்டாக பொறிவைத்திருக்கிறார். ஆனால் கைல் அதில் சிக்காமல் சைலண்ட்டாக நழுவிவிட்டார் என்று சௌதி கூறியுள்ளார்.
 

click me!