பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 17ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் ஒரு சிக்ஸ் அடித்ததன் மூலமாக 17 போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 16ஆவது சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் தான் 17ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த சீசனின் முதல் சிக்ஸரை விராட் கோலி அடித்தார். இதையடுத்து ஒவ்வொரு போட்டியிலும் 5க்கும் அதிகமான சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு வருகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 8ஆவது போட்டியில் மட்டும் 30 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது லீக் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 18 சிக்ஸரும், 2ஆவது இன்னிங்ஸில் 11 சிக்ஸரும் விளாசப்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போது ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் விருத்திமான் சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இந்தப் போட்டியில், சுப்மன் கில் ஒரு சிக்ஸ் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. 17ஆவது ஐபிஎல் போட்டியின் போது 300 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நடந்த ஐபிஎல் தொடர்களில் 17 போட்டிகளில்
300* சிக்ஸர்கள் 2024
259 சிக்ஸர்கள் 2023
258 சிக்ஸர்கள் 2020
245 சிக்ஸர்கள் 2018
245 சிக்ஸர்கள் 2022 என்று அடிக்கப்பட்டுள்ளது.