குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 17ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான 17ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டன் காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சிக்கந்தர் ராஸா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணியில் டேவிட் மில்லர் காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் அணியில் இடம் பெற்றுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), பிராப்சிம்ரன் சிங், சாம் கரண், சஷாங்க் சிங், சிக்கந்தர் ராஸா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், கஜிஸோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், அஸ்மதுல்லா உமர்சாய், ராகுல் திவேதியா, ரஷீத் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், தர்ஷன் நீல்கண்டே.