வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அவங்க 2 பேருல யாருக்கு டீம்ல இடம்..? எகிறிய எதிர்பார்ப்பு.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Aug 22, 2019, 10:54 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 
 

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய அணி ஆடவுள்ள முதல் டெஸ்ட் போட்டியே, இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டி. 

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 

இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 7 பேட்ஸ்மேன்கள் மற்றும் 4 பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கும். 4 பவுலர்களில் அஷ்வின் ஒருவர் மட்டுமே ஸ்பின்னராக இருப்பார். மற்ற மூவரும் ஃபாஸ்ட் பவுலர்கள் தான் இருப்பார்கள். 

7 பேட்ஸ்மேன்களில் மயன்க் மற்றும் ராகுல் தொடக்க வீரர்கள். புஜாரா மற்றும் கோலி ஆகிய இருவரும் அடுத்தடுத்த வரிசைகளில் இறங்குவார்கள். மிடில் ஆர்டரில் ரஹானேவும் ரிஷப் பண்ட்டும் கண்டிப்பாக இருப்பார்கள். இன்னும் ஒரு பேட்ஸ்மேனுக்கான இடத்தை பிடிக்கப்போவது ரோஹித்தா விஹாரியா என்பதே எதிர்பார்ப்பு. விஹாரி நன்றாக ஆடிவருகிறார். அதேநேரத்தில் ரோஹித் நல்ல ஃபார்மில் இருப்பதால் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 

ரோஹித் - விஹாரி ஆகிய இருவரில் ரோஹித் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

உத்தேச இந்திய அணி:

மயன்க் அகர்வால், ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி.
 

click me!