இது வெறும் ட்ரெய்லர் தான்.. மெயின் பிக்சரை இன்னும் நீங்க பார்க்கல.. ஆஸ்திரேலிய அணிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பென் ஸ்டோக்ஸ்

By karthikeyan VFirst Published Aug 20, 2019, 5:46 PM IST
Highlights

ஆர்ச்சரின் பவுன்ஸரையும் வேகத்தையும் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். ஆர்ச்சரை கண்டு பயப்படுகிறார்கள் என்று சொன்னால்கூட மிகையாக இருக்காது. அந்தளவிற்கு ஆர்ச்சரின் வேகமும் துல்லியமான பவுன்ஸரும் பேட்ஸ்மேன்களை மிரட்டுகிறது. 
 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரில் அனல் பறக்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஸ்மித் தான் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக திகழ்ந்தார். இரண்டாவது போட்டியில் ஸ்மித்தை சமாளிப்பதற்காகவே ஜோஃப்ரா ஆர்ச்சரை இங்கிலாந்து அணி எடுத்தது. 

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆர்ச்சர், தனது வேகத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டினார். ஆஸ்திரேலிய அணியின் தூணாக திகழும் ஸ்மித்திற்கு 148 கிமீ வேகத்தில் ஒரு பவுன்ஸரை வீசி அவரை சாய்த்தார். பின்னர் அவர் ஆடமுடியாததால் இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு பதிலாக களமிறங்கிய லபுஷேனுக்கு முதல் பந்தையே முகத்திற்கு நேராக பவுன்ஸராக வீசி, மிரட்டல் வரவேற்பு கொடுத்தார். 

ஆர்ச்சரின் பவுன்ஸரையும் வேகத்தையும் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். ஆர்ச்சரை கண்டு பயப்படுகிறார்கள் என்று சொன்னால்கூட மிகையாக இருக்காது. அந்தளவிற்கு ஆர்ச்சரின் வேகமும் துல்லியமான பவுன்ஸரும் பேட்ஸ்மேன்களை மிரட்டுகிறது. 

இந்நிலையில், ஆர்ச்சரை தாறுமாறாக புகழ்ந்து பேசியுள்ளார் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ். பவுன்ஸர் போடுவது என்பது ஆட்டத்தின் ஒரு அங்கம். ஆனால் ஆர்ச்சர் அதுதான் பெரிய அங்கமே. ஆக்ரோஷமாக வீசி, எதிரணி பேட்ஸ்மேன்களை களத்தில் செட்டில் ஆக அனுமதிப்பதே இல்லை ஆர்ச்சர். தான் வீசிய பவுன்ஸர் பேட்ஸ்மேனை தாக்கிவிட்டது என்பதற்காக எந்த ஒரு பவுலரும் நான் இனிமேல் பவுன்ஸர் வீசமாட்டேன் என சொல்லமாட்டார். 

தனது பந்தில் பேட்ஸ்மேனுக்கு அடிபடும்போது எந்தவொரு பவுலருக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த பந்தே பவுன்ஸராக வீசியாகத்தான் வேண்டும். ஏனெனில் அதுதான் ஆட்டம். ஆர்ச்சர் பவுன்ஸர்களை அபாரமாக வீசுகிறார். எங்களது பவுலிங்கிற்கு வேறு ஒரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார் ஆர்ச்சர். முதல் இன்னிங்ஸில் 29 ஓவர்களை வீசினார் ஆர்ச்சர். அதில் அவரது கடைசி ஸ்பெல்லில் வீசிய 8 ஓவர்கள் மிகவும் அபாரமானவை. 2013ல் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் இதேபோன்று ஆக்ரோஷமாக வீசியதை பார்த்திருக்கிறோம். ஆனால் அதே ஆக்ரோஷமான பவுலிங்கை அசால்ட்டாக வீசுகிறார் என்று ஆர்ச்சரை பென் ஸ்டோக்ஸ் புகழ்ந்துள்ளார். 
 

click me!