India vs South Africa: 2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

Published : Jan 02, 2022, 06:07 PM IST
India vs South Africa: 2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.  

3 டெஸ்ட் மற்றும்  3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 

தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி அபாரமாக விளையாடி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் வெற்றி பெற்று கொடிநாட்டியது இந்திய அணி.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதில் உறுதியாக இருக்கும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து தொடரை வெல்வதற்கான வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோஹன்னஸ்பர்க்கில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம். இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் டெஸ்ட்டில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.

உத்தேச இந்திய அணி:

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!
IND vs JPN T20I: ஜப்பானுடன் டி20 மோதல், சஞ்சுவுடன் வைபவ் ஓப்பனிங், அபிஷேக்குக்கு ரெஸ்ட்!