அஷ்வினோட அனுபவத்தின் மீது ராகுல் டிராவிட் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கார்..! அஷ்வினுக்கு அடித்த செம லாட்டரி

Published : Jan 02, 2022, 04:29 PM IST
அஷ்வினோட அனுபவத்தின் மீது ராகுல் டிராவிட் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கார்..! அஷ்வினுக்கு அடித்த செம லாட்டரி

சுருக்கம்

அஷ்வின் அனுபவத்தின் மீது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கை தான், அவர் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட காரணம் என்று முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி கருத்து கூறியுள்ளார்.  

இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின். தோனி தலைமையிலான இந்திய அணியில் முன்னணி ஸ்பின்னராக ஜொலித்த அஷ்வின், கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றபின்னர், ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

2017ம் ஆண்டுக்கு பிறகு வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடிராத அஷ்வின், 4 ஆண்டுகள் கழித்து டி20 அணியில் இடம்பெற்றார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின் இடம்பெற்றார். இந்நிலையில், இப்போது ஒருநாள் அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவிற்காக 111 ஒருநாள் போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின், கடைசியாக 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடினார். அதன்பின்னர் நான்கரை ஆண்டுகள் ஒருநாள் அணியில் இடம்பெறாத அஷ்வின், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அஷ்வினின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டது என கருதப்பட்ட நிலையில், இப்போது மீண்டு கம்பேக் கொடுத்துள்ளார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணி நிர்வாகம் அவரது அனுபவத்தின் வைத்திருக்கும் நம்பிக்கை தான் அஷ்வின் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற காரணம் என்று ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ரிதீந்தர் சிங் சோதி, அஷ்வினுக்கு லாட்டரி அடித்திருக்கிறது. அஷ்வின் கெரியர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என கருதப்பட்ட நிலையில், அவருக்கு மீண்டும் லைஃப் கிடைத்துள்ளது. அஷ்வின் சிறந்த ஆட்டக்காரர்; மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். ராகுல் டிராவிட், அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் அஷ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத்தான் இது காட்டுகிறது. அஷ்வினை அணியில் எடுத்தது மிகச்சரியான முடிவுதான்.ஏனெனில் இந்த தென்னாப்பிரிக்க தொடர் அவ்வள்ளவு எளிதானது அல்ல என்று ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!