
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என வென்றது. அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.
இந்திய அணி டி20 தொடரை ஜெயித்துவிட்டதால், விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் கடைசி டி20 போட்டி மற்றும் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் ஆகிய போட்டிகளிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
எனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், முதல் 2 போட்டிகளில் ஆடாத சில வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படும். விராட் கோலியின் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டும், ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரும் அணியில் சேர்க்கப்படுவார்கள்.
பவுலர்களில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் சேர்க்கப்படலாம். ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக சைனாமேன் குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம்.
3வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்ஷல் படேல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய்.