
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
ரோஹித் சர்மா முழுநேர கேப்டனான பிறகு அவரது தலைமையில் இந்திய அணி ஆடும் முதல் ஒருநாள் தொடர் இது என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேஎல் ராகுல் அவரது தங்கச்சி திருமணத்திற்கு சென்றுள்ளதால் முதல் ஒருநாள் போட்டியில் ஆடவில்லை. தவான், ருதுராஜ், ராகுல் ஆகிய 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஆடமுடியாததால், தன்னுடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராக இறங்கவுள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா உறுதி செய்துவிட்டார்.
மயன்க் அகர்வால் இன்னும் குவாரண்டினை முடிக்காததால் ரோஹித்துடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராக இறங்கவுள்ளார். 3ம் வரிசையில் விராட் கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். 5ம் வரிசையில் சூர்யகுமார் யாதவும், 6ம் வரிசையில் தீபக் ஹூடாவும் இறங்குவார்கள்.
ஆல்ரவுண்டர்களாக ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹரும் ஆடுவார்கள். ஸ்பின்னர்களாக குல்தீப் - சாஹல் ஜோடி மீண்டும் இந்த போட்டியில் இணைந்து கம்பேக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாஸ்ட் பவுலராக முகமது சிராஜ் ஆடுவார்.
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், சாஹல், முகமது சிராஜ்.