தொடக்க ஜோடியில் அதிரடி மாற்றம்.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Mar 2, 2019, 10:07 AM IST
Highlights

டி20 தொடர் வெற்றி, ஒருநாள் தொடரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஆஸ்திரேலிய அணிக்கு அளித்துள்ளது. அதேநேரத்தில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளை பொறுத்தமட்டில் மிகவும் வலுவாக இருக்கிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, 2-0 என டி20 தொடரை வென்றது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சொந்த மண்ணில் இந்திய அணியிடம் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. டி20 தொடரில் வெற்றி பெற்றது, அந்த அணிக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. 

டி20 தொடர் வெற்றி, ஒருநாள் தொடரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஆஸ்திரேலிய அணிக்கு அளித்துள்ளது. அதேநேரத்தில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளை பொறுத்தமட்டில் மிகவும் வலுவாக இருக்கிறது. ஆனால் உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் இந்திய அணி தோல்வியை விரும்பாது. ஆஸ்திரேலிய அணியின் சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்திய இந்திய அணி, சொந்த மண்ணில் அவ்வளவு எளிதாக விட்டுவிடாது. அதனால் வெற்றி முனைப்பில் உள்ளது இந்திய அணி. 

இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், அணியில் சில பரிசோதனை முயற்சிகளை செய்யும் கடைசி வாய்ப்பு இதுதான். அதனால் ராகுல், ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஆகியோருக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படும். 

இன்று ஹைதராபாத்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் தவானுக்கு பதில் ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. கோலி, ரிஷப் பண்ட், ராயுடு, கேதர் ஜாதவ், தோனி ஆகியோர் அணியின் நிரந்தர வீரர்கள். ஹர்திக் பாண்டியா காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகியிருப்பதால் விஜய் சங்கருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும்.

குல்தீப், சாஹல், பும்ரா, ஷமி ஆகியோர் பவுலர்களாக இருப்பர். புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றிருக்கும் கவுல், இந்த போட்டியில் ஆட வாய்ப்பில்லை. அதேபோல ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் அணியில் இடம்பெற்றுள்ள ஜடேஜாவிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ராகுல், கோலி(கேப்டன்), ராயுடு, கேதர், தோனி(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, ஷமி. 
 

click me!