India vs South Africa: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jan 20, 2022, 06:42 PM IST
India vs South Africa: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள்  போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பார்லில் நடந்தது. முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டி நாளை(ஜனவரி 21) பார்லில் நடக்கிறது. முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணியோ, இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் 6வது பவுலிங் ஆப்சனாக அணியில் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு ஓவர் கூட வழங்கப்படவில்லை. விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய இந்திய பவுலர்கள் ரன்களையும் அதிகமாக வழங்கினர். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவாக இருந்தாலும், மிடில் ஆர்டர் பேட்டிங் படுமோசமாக சொதப்பியது. இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் தான் இந்திய அணி தோற்றது.

இந்திய அணியில் இப்படியாக சிறு சிறு பிரச்னைகள் இருந்தாலும், அதற்காக 2வது போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் போட்டியில் செய்த தவறுகளை களைய இந்திய அணி முயலுமே தவிர, அணி காம்பினேஷனில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை. அணியின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக அதே காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.

உத்தேச இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ishan Kishan RBI Job: பேங்க் ஆபீஸரான இஷான் கிஷன்! மாச சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Brett Lee: பிரீத்தி ஜிந்தாவுடன் காதலா? 16 வருஷம் கழிச்சு உண்மையை உடைத்த பிரெட் லீ