India vs South Africa: இவங்க 2 பேருல ஒருவரை தூக்கிட்டு அவங்க 2 பேருல ஒருவரை சேர்த்தே ஆகணும்! தினேஷ் கார்த்திக்

By karthikeyan VFirst Published Jan 20, 2022, 5:05 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி பார்லில் நடந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, டெம்பா பவுமா (110) மற்றும் வாண்டர் டசனின் (129*) அபாரமான சதத்தால் 50 ஓவரில் 296 ரன்களை குவித்தது.

297 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 265 ரன்கள் மட்டுமே அடித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என தென்னாப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பலால் தான் இந்திய அணி தோற்றது. அதேவேளையில், பவுலிங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. பும்ரா மட்டுமே நன்றாக வீசினார். 10 ஓவரில் 48 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார் பும்ரா. புவனேஷ்வர் குமார் 64 ரன்கள் விட்டுக்கொடுக்க, ஷர்துல் தாகூர் 72 ரன்களை வாரி வழங்கினார். ஸ்பின்னர்கள் அஷ்வின் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் தலா 53 ரன்களை வழங்கினர்.  அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய பவுலர்கள் அனைவருமே ரன்களை வாரிவழங்கியதுடன், டெம்பா பவுமா - வாண்டர் டசன் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறினர். கடைசியில் 49வது ஓவரில் தான் அந்த ஜோடியை பிரித்தனர். அந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் அவ்வளவு மோசமில்லை. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் படுமோசமான சொதப்பலால் தான் இந்திய அணி தோற்றது.

இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் ஒரு மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார். அந்த ஒரு மாற்றத்தை பவுலிங் யூனிட்டில் செய்ய வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், பும்ரா - புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு பிரசித் கிருஷ்ணா -முகமது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவரை கண்டிப்பாக சேர்க்கவேண்டும். பும்ராவை நீக்குவதா அல்லது புவனேஷ்வர் குமாரை நீக்குவதா என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். பிரசித் கிருஷ்ணாவும் சிராஜும் நல்ல வேகமாக வீசக்கூடியவர்கள். எனவே மிடில் ஓவர்களில் அவர்களது வேகம் அணிக்கு பயனளிக்கும். முதல் போட்டியில் அதுதான் மிஸ் ஆனது. அதனால் 2வது ஒருநாள் போட்டியில் அவர்கள் இருவரில் ஒருவரை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் பரிந்துரைத்த மாற்றத்தின் படி இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார்/பும்ரா, முகமது சிராஜ்/பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல். 
 

click me!