ZIM vs IND: ஆடாத வீரர்களுக்கு கடைசி ODI-யில் வாய்ப்பு! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.. உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Aug 21, 2022, 2:54 PM IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மெயின் அணி ஆசிய கோப்பைக்கு தயாராகிவரும் நிலையில், கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே தொடரில் ஆடிவருகிறது.

3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என வென்றுவிட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து

கடைசி ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் உள்ளது ஜிம்பாப்வே அணி.

கடைசி போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்திய அணியின் பென்ச் வலிமையை பலப்படுத்தும் நோக்கில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துவருகிறது இந்திய அணி நிர்வாகம். அந்தவகையில், இந்த தொடரை வென்றுவிட்டதால் முதல் 2 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு கடைசி போட்டியில் வாய்ப்பளிக்கப்படும்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பையிலிருந்து விலகிய மேட்ச் வின்னர்..! பாகிஸ்தானுக்கு பாதகம்.. இந்தியாவிற்கு சாதகம்

எனவே ராகுல் திரிபாதி, ஆவேஷ் கான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இஷான் கிஷன், ஷிகர் தவான் ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம். மேலும் குல்தீப் யாதவுக்கு பதிலாக ஷபாஸ் அகமது ஆட வாய்ப்புள்ளது.

உத்தேச இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கேப்டன்), ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், ஆவேஷ் கான், ஷபாஸ் அகமது, பிரசித் கிருஷ்ணா.
 

click me!