India vs West Indies: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Feb 15, 2022, 04:17 PM IST
India vs West Indies: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.  

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் தொடரில் 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி தொடரை வென்றது.

அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடக்கவுள்ளது. நாளை(பிப்ரவரி 16), 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் நடக்கவுள்ளன. 3 டி20 போட்டிகளும் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கவுள்ளது.

நாளை நடக்கும் முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம். டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேஎல் ராகுல், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர்  ஆகிய மூவரும் காயத்தால் தொடரைவிட்டு வெளியேறியதால், அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்குவார். விராட் கோலி 3ம் வரிசையில் ஆடுவார். 4ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் - சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரும், 5ம் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் இறங்குவார்கள்.

ஆல்ரவுண்டர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஸ்பின்னர்களாக யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் ஆடுவார்கள்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்/சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!