கொஞ்சம் கூட ரெஸ்ட்டே இல்லாத இந்திய அணி..! 2021 ஃபுல்லா மேட்ச் தான்.. முழு அட்டவணை

By karthikeyan VFirst Published Nov 18, 2020, 6:36 PM IST
Highlights

2021ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு படுபிசியான ஆண்டாக அமையவுள்ளது.
 

கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாதத்திலிருந்து இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவில்லை. ஐபிஎல்லில் தங்களது ஆஸ்தான வீரர்கள் ஆடியதை ரசிகர்கள் கண்டு களித்திருந்தாலும், நீல நிற ஜெர்சியில் இந்திய வீரர்கள் நாட்டுக்காக ஆடி பல மாதங்கள் ஆகிவிட்டன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, வரும் 27ம் தேதி முதல் அடுத்த 2 மாதங்களுக்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு ஆடுகிறது. அதன்பின்னர் 2021 ஜனவரியில் ஆஸ்திரேலிய தொடர் தொடங்கி அடுத்த ஆண்டு டிசம்பர் வரை அனைத்து மாதங்களும் இந்திய அணி கிரிக்கெட் ஆடவுள்ளது. அடுத்த ஆண்டில் இந்திய அணி ஒரு மாதம் கூட ஃப்ரீயில்லை என இன்சைட் ஸ்போர்ட் தெரிவித்துள்ளது. 

2021ல் 14 டெஸ்ட், 16 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் இந்திய அணி ஆடவுள்ளது. அடுத்த ஆண்டுக்கான இந்திய அணியின் முழு போட்டி அட்டவணையை பார்ப்போம்.

ஜனவரி-மார்ச் காலக்கட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து தொடர்

மார்ச் முதல் மே வரை ஐபிஎல் 14வது சீசன்

ஜூன் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, ஒருநாள் தொடரில் ஆடிவிட்டு, அப்படியே ஆசிய கோப்பையிலும் ஆடுகிறது. அதன்பின்னர் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்.

ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, செப்டம்பர் வரை அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அக்டோபரில் ஆடுகிறது. அதன்பின்னர் இந்தியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை நடக்கிறது. 

அதன்பின்னர் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடும் இந்திய அணி, அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று ஆடவுள்ளது.
 

click me!