வங்கதேச அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

By karthikeyan VFirst Published Mar 9, 2020, 9:59 AM IST
Highlights

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 

வங்கதேச அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து 3-0 என தொடரை வென்றது. இந்த தொடருடன் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மஷ்ரஃபே மோர்டசா விலகினார். 

மோர்டசா கடந்த 5 ஆண்டுகளாக வங்கதேச ஒருநாள் அணியை வழிநடத்திவந்த நிலையில், இதுதான் சரியான தருணம் என்று கூறி தனது கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து புதிய கேப்டனை நியமிப்பது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தியது. 

இடைக்கால கேப்டனை நியமித்துவிட்டு, பின்னர் நிரந்தர கேப்டனை நியமிப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்ததால், ஒருமனதாக தமீம் இக்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு! 3 சீனியர் வீரர்கள் கம்பேக்

2007ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான தமீம் இக்பால், 13 ஆண்டுகளாக தொடர்ந்து வங்கதேச அணிக்காக ஆடிவருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 13 சதங்கள், 47 அரைசங்களுடன் 7202 ரன்களைன் குவித்துள்ளார். வங்கதேச அணியின் சீனியர் வீரர்களில் தமீம் இக்பாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!