அஸ்வினைப் பாராட்டி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. 500 விக்கெட் மற்றும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதைக் குறிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் மற்றும் 100 வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்ட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
100 டெஸ்டில் விளையாடிய முதல் தமிழக கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்டில் 500 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சனிக்கிழமை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் பங்கேற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஐசிசி தலைவரும் பிசிசிஐ தலைவருமான என். சீனிவாசன், முன்னாள் இந்திய கேப்டன்கள் அனில் கும்ப்ளே மற்றும் கே. ஸ்ரீகாந்த் மற்றும் தற்போதைய பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் சிறப்பு விருந்தனர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அஸ்வினைப் பாராட்டி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. 500 விக்கெட் மற்றும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதைக் குறிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் மற்றும் 100 வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்ட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
கும்ப்ளே தனது வாழ்க்கைக்கும் அஷ்வின் வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றிப் பேசினார். அவர்கள் பேட்ஸ்மேன்களாகத் விளையாடத் தொடங்கி தற்செயலாக ஸ்பின்னர்களாக மாறியது பற்றிப் பேசினார்.
எல்லா மேட்சும் இந்தியாவுல தான் நடக்கும்... இது துபாய் பிரீமியர் லீக் அல்ல... : அருண் துமால் உறுதி
"அஸ்வின் இந்தியாவுக்காக விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவர். சிறந்த வீரர்களுடன் ஒப்பிடும்போது அவரது சாதனை சிறப்பானது. அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் அவரது பங்கு அதனை மேலும் அழகுபடுதுகிறது. அவருக்கும் இந்திய அணி பெற்ற வெற்றிகளுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது” என்று கும்ப்ளே கூறினார்.
அஸ்வின் தனது 100வது டெஸ்டில் மிகவும் முன்னதாகவே விளையாடியிருக்க வேண்டும் என்று கும்ப்ளே தெரிவித்தார். மேலும் அஸ்வின் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் கிளப், டிஎன்பிஎல் மற்றும் மாநில அணிக்காகவும் விளையாடி வருவதை கும்ப்ளே பாராட்டினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சக இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, முன்னாள் இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரும் வீடியோ கால் மூலம் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அஸ்வின் தனது தனது ஏற்புரையில், கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். 14 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக அணிக்குத் தேர்ந்தெடுத்ததையும், இந்தியா சிமெண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ஜாலி ரோவர்ஸ் அணிக்காக விளையாடிய லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது பற்றியும் குறிப்பிட்டார்.
பூமியை ஊடுருவிச் சென்ற 7 வினோதப் பொருட்கள்! அடுத்து என்ன நடக்கப்போகுது? விஞ்ஞானி விளக்கம்