IPL 2022: ஐபிஎல் 15வது சீசனிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்..! MI-க்கு இருந்த ஒரு ஆதரவும் போச்சு

Published : May 09, 2022, 07:12 PM IST
IPL 2022: ஐபிஎல் 15வது சீசனிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்..! MI-க்கு இருந்த ஒரு ஆதரவும் போச்சு

சுருக்கம்

காயம் காரணமாக ஐபிஎல் 15வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.  

ஐபிஎல் 15வது சீசனில் 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமாக ஆடிவருகிறது. இந்த சீசனில் 10 போட்டிகளில் வெறும் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதுடன் பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.

இந்த சீசனில் மும்பை  இந்தியன்ஸ் அணிக்கு ஒரே ஆறுதலாக இருந்தது சூர்யகுமார் யாதவ் தான். அபாரமாக பேட்டிங் ஆடி 8 போட்டிகளில் 303 ரன்களை குவித்தார் சூர்யகுமார் யாதவ். அவர் ஒருவர் தான் மும்பை அணியில் சிறப்பாக பேட்டிங் ஆடிவந்தார்.

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் வலது கையில் காயமடைந்த சூர்யகுமார் யாதவ், இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால், இந்த சீசனில் லீக் சுற்றில் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் மட்டுமே மும்பை அணி ஆடவுள்ளது. அதிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?