வெளியில இருந்து விமர்சனம் பண்றது ஈசி; ரிஷப் களத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் நான் ஆதரிக்கிறேன் - பாண்டிங்

Published : May 09, 2022, 05:41 PM IST
வெளியில இருந்து விமர்சனம் பண்றது ஈசி; ரிஷப் களத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் நான் ஆதரிக்கிறேன் - பாண்டிங்

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழும் நிலையில், பண்ட்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.  

ஐபிஎல் 15வது சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வெற்றி பெறுவதும் தோல்வியடைவதுமாக இருந்துவருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் அதிகரித்திருக்கும். ஆனால் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது டெல்லி அணி.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 208 ரன்களை அடிக்க, 209 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி அணி வெறும் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 91 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த படுதோல்வி டெல்லி கேபிடள்ஸ் அணியின் நெட் ரன்ரேட்டையும் கடுமையாக பாதித்தது.

இதுவரை 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது டெல்லி அணி. சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் இதே நிலையில் தான் உள்ளன. ஆனால் டெல்லி அணிக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி விமர்சனத்துக்குள்ளானது. இந்த சீசனில் களத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் விமர்சனத்துக்குள்ளாகிவரும் நிலையில், அதுகுறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், களத்தில் ரிஷப் பண்ட் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் நான் ஆதரிக்கிறேன். டி20 கிரிக்கெட்டில், அதுவும் அழுத்தமான சூழல்களில் முடிவெடுக்க கேப்டனுக்கு போதிய கால அவகாசம் இருக்காது. வெளியிலிருந்து விமர்சிப்பதும், ஒருவரை தீர்மானிப்பதும் எளிது. ஆனால் களத்தில் அவ்வளவு எளிதாக இருக்காது. கேப்டன் களத்தில் வேகமாக முடிவெடுக்க வேண்டும்  என்று ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?