IPL 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

Published : Feb 22, 2022, 06:51 PM IST
IPL 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனுக்கான  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான, சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குவதால், இந்த சீசனில் 10 அணிகள் ஆடுகின்றன. எனவே இந்த சீசனுக்கான மெகா ஏலமாக நடந்தது.

மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்தது. ஏலத்திற்கு முன்பாக வார்னர், ரஷீத் கான் என பெரிய வீரர்களை எல்லாம் விடுவித்துவிட்டு, கேப்டன் கேன் வில்லியம்சனுடன் உம்ரான் மாலிக், அப்துல் சமாத் ஆகிய இளம் வீரர்களை மட்டுமே தக்கவைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஏலத்தில்  நல்ல வீரர்களை எடுத்தது.

எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், க்ளென் ஃபிலிப்ஸ், ரொமாரியோ ஷெஃபெர்டு, மார்கோ ஜான்சென், சீன் அபாட் ஆகிய வெளிநாட்டு வீரர்களுடன், ராகுல் திரிபாதி, ப்ரியம் கர்க், கார்த்திக் தியாகி, நடராஜன், புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன் என்னவாக இருக்கும் என்பதை பார்ப்போம். கேப்டன் கேன் வில்லியம்சனே தொடக்க வீரராக இறங்கவுள்ளார். அவருடன் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா தொடக்க வீரராக இறங்கவுள்ளார்.

3ம் வரிசையில் மார்க்ரம், 4ம் வரிசையில் ராகுல் திரிபாதி ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் 5ம் வரிசையிலும் பேட்டிங் ஆடுவார்கள். 6ம் வரிசையில் இளம் வீரர் அப்துல் சமாத் ஆடுவார். ஆட்டத்தின் சூழலை பொறுத்து இந்த பேட்டிங் ஆர்டர் மாற்றப்படும்.

ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக வெஸ்ட் இண்டீஸின் ரொமாரியோ ஷெஃபெர்டு ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக சீனியர் பவுலர் புவனேஷ்வர் குமார் மற்றும் இளம் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் ஆடுவார்கள்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, மார்க்ரம், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், ஷ்ரேயாஸ் கோபால், ரொமாரியோ ஷெஃபெர்டு, புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
இந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்கும் ரோ-கோ எப்போது தெரியுமா? கோலி, ரோஹித்தின் அடுத்த ஒருநாள் போட்டி