#MIvsSRH உண்மையை உணர்ந்துகொண்ட டேவிட் வார்னர்..! அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Published : Apr 17, 2021, 02:13 PM IST
#MIvsSRH உண்மையை உணர்ந்துகொண்ட டேவிட் வார்னர்..! அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.  இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி ஆடிய முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய நிலையில், இன்று 3வது போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

சென்னையில் இன்று நடக்கும் அந்த போட்டியில், சன்ரைசர்ஸ் அணியின் ஆடும் லெவனில் சில மாற்றங்கள் செய்யப்படும். முதலிரண்டு போட்டிகளில் ஆடாத கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் ஆடுவார். வில்லியம்சன் இல்லாததால் பலவீனமாக இருக்கிறது சன்ரைசர்ஸின் மிடில் ஆர்டர் பேட்டிங். எனவே அதை பலப்படுத்தும் விதமாக பேர்ஸ்டோ நீக்கப்பட்டு வில்லியம்சன் சேர்க்கப்படுவார்.

மேலும், கடந்த போட்டியில் ஆடிய ஜேசன் ஹோல்டர் நீக்கப்பட்டு, மீண்டும் ஸ்பின் ஆல்ரவுண்டர் முகமது நபி அணியில் சேர்க்கப்படுவார். முகமது நபி வருவதால், உள்நாட்டு ஸ்பின்னரான நதீம் நீக்கப்பட்டு, ஃபாஸ்ட் பவுலர் சந்தீப் ஷர்மா சேர்க்கப்படுவார்.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர்(கேப்டன்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், அப்துல் சமாத், விஜய் சங்கர், முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!