டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கு..? சுனில் கவாஸ்கர் கருத்து

By karthikeyan VFirst Published Sep 13, 2022, 4:20 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 4 வீரர்கள் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டனர்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - அவரை கண்டிப்பா இந்திய அணியில் எடுத்திருக்கணும்! உலக கோப்பை வின்னிங் டீமை தேர்வுசெய்த முன்னாள் தேர்வாளர் அதிரடி

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இந்திய அணி தேர்வில் முன்னாள் வீரர்கள் சிலருக்கு அதிருப்தி இருக்கிறது. ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை இந்திய அணியில் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். சஞ்சு சாம்சனை எடுக்காமல், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகிய வீரர்களை எடுத்தது குறித்து ரசிகர்களும் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணி தேர்வு குறித்து கருத்து கூறியுள்ள சுனில் கவாஸ்கர், ரவி பிஷ்னோய் இளம் வீரர் தான். அதனால் எதிர்காலத்தில் நிறைய டி20 உலக கோப்பைகளில் ஆடுவார். அவரை அணியிலிருந்து புறக்கணிக்கமுடியாத அளவிற்கு சிறப்பாக ஆடிவருகிறார். 

இதையும் படிங்க - T20 World Cup: அவங்க 2 பேருக்கு பதிலா இவங்க 2 பேர் தான் என் சாய்ஸ்! இந்திய அணி தேர்வை விமர்சிக்கும் அசாருதீன்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி சிறந்த அணி தான். பும்ரா, ஹர்ஷல் படேல் இல்லாத இந்திய அணி, இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் தோல்விகளை சந்தித்தது. பும்ரா, ஹர்ஷல் படேல் இருக்கும் இந்திய அணி வலுவாக திகழும். அர்ஷ்தீப் சிங் இடது கை ஃபாஸ்ட் பவுலராக ஒரு வெரைட்டியை கொடுப்பார் என்பதால் அவர் எடுக்கப்பட்டுள்ளார். அவரது தேர்வு அருமையானது. இந்திய அணி சிறந்த  அணி தான். அதை 100 சதவிகிதம் நாம் ஆதரிக்க வேண்டியது அவசியம் என்றார் கவாஸ்கர்.
 

click me!