இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை ரெஸ்ட்டே எடுக்கவிடாமல் தெறிக்கவிடுறாப்ள சிராஜ்..! கவாஸ்கர் புகழாரம்

By karthikeyan VFirst Published Aug 15, 2021, 6:53 PM IST
Highlights

ஒவ்வொரு பந்துமே விக்கெட் வீழ்த்துவதை போலவே வீசுவதாக இந்திய அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜை பாராட்டியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
 

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட் நடந்துவருகிறது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பலமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுடன் இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலளித்துவருகிறது.

இந்திய அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களான இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி ஆகியோருடன் இணைந்து இளம் பவுலரான முகமது சிராஜ் மிரட்டுகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒவ்வொரு பந்துமே விக்கெட்டை எதிர்பார்க்குமளவிற்கு அருமையான இன்ஸ்விங் மற்றும் ஆங்கிளில் பந்துவீசி அசத்தினார் சிராஜ். குறிப்பாக இங்கிலாந்து கேப்டனும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனுமான ஜோ ரூட்டின் விக்கெட்டை கிட்டத்தட்ட எடுக்குமளவிற்கு பல வாய்ப்புகளை உருவாக்கினார் சிராஜ்.

இந்நிலையில், சிராஜ் குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், பேட்ஸ்மேன்கள் ஃபாஸ்ட் பவுலிங்கை எதிர்கொள்ளும்போது, பவுலர்களின் உடல்மொழியை பார்ப்பார்கள். இது பேட்ஸ்மேன்களின் வழக்கம். பவுலர்கள் சோர்வாக இருப்பதை பார்த்துவிட்டால், ஸ்கோர் செய்யலாம் என்ற நம்பிக்கை பேட்ஸ்மேன்களுக்கு வரும். ஆனால் பேட்ஸ்மேன்களின் இந்த திட்டம் சிராஜிடம் ஒர்க் அவுட் ஆகாது. ஒவ்வொரு பந்துமே விக்கெட் வீழ்த்துவதை போலவே மிரட்டலாக வீசுகிறார் சிராஜ். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை ஓய்வே எடுக்க விடாமல் டைட்டாக வீசுகிறார் சிராஜ் என்று கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!