IPL 2023: தோனி போன்று யாரும் கிடையாது; எதிர்காலத்தில் யாரும் வரப்போவதும் இல்லை - சுனில் கவாஸ்கர் பாராட்டு!

By Rsiva kumar  |  First Published Apr 17, 2023, 6:47 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம் எஸ் தோனியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். 


ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. இந்த மைதானத்தில் அதுவும் ஆர்சிபி அணிக்கு எதிராக தோனி பல சாதனைகளை படைத்திருக்கிறார். ஏற்கனவே சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி 200ஆவது போட்டியில் பங்கேற்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2023: தன்னை போன்று யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ரூ. 50 லட்சத்தில் ஹாஸ்டல் கட்டியுள்ள ரிங்கு சிங்!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், சிஎஸ்கே கேப்டனான எம் எஸ் தோனியை வெகுவாக பாராட்டியுள்ளார். சிஎஸ்கே அணிக்கு இக்கட்டான சூழலிலிருந்து எப்படி வெளியில் வருவது என்று நன்கு தெரியும். இதற்கு தோனியின் கேப்டன்ஷிப் தான் காரணம். அதுமட்டுமின்றி 200 போட்டிகளில் ஒரு அணிக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண பணி கிடையாது.

IPL 2023: சிஎஸ்கே அணிக்கு எதிராக சாதனை படைக்க காத்திருக்கும் கிங் கோலி!

தோனியின் கேப்டன்ஷிப் சற்று வித்தியாசமானதாக இருக்கும். தோனி போன்று யாரும் எந்த கேப்டனும் இருந்ததில்லை. இனி வரும் காலத்தில் தோனியைப் போன்று யாரும் வரப்போவதும் கிடையாது என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். 

IPL 2023: மும்பை போட்டியில் வீரர்களுக்கு இடையில் வாக்குவாதம்: சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணாவிற்கு அபராதம்!

click me!