ஐபிஎல் 2020: இந்த சீசனில் கண்டிப்பா சிஎஸ்கே மண்ணை கவ்விடும்..! காரணத்துடன் சொல்லும் கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Sep 17, 2020, 7:58 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் சிஎஸ்கே கண்டிப்பாக டைட்டிலை வெல்ல முடியாது என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி சிஎஸ்கே. இதுவரை ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் 10 சீசன்களில் ஆடியுள்ள சிஎஸ்கே, அனைத்திலுமே பிளே ஆஃபிற்குள் நுழைந்தது. ஆடிய அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்ற ஒரே அணி சிஎஸ்கே மட்டுமே.

அதில், 8 முறை இறுதி போட்டி வரை சென்று 3 முறை கோப்பையை வென்ற வெற்றிகரமான அணி சிஎஸ்கே. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, ஐபிஎல்லில் செம கெத்தாக கோலோச்சுகிறது. கடந்த சீசனில் இறுதி போட்டி வரை சென்று, நூழிலையில் வெற்றியை நழுவவிட்ட சிஎஸ்கே, இந்த சீசனில் 4வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களின் கூடாரமாக எப்போதுமே திகழ்கிறது சிஎஸ்கே. இந்த சீசனில், அந்த அணியின் அனுபவ, நட்சத்திர வீரர்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஆடவில்லை. ஐபிஎல்லில் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த, சீனியர் வீரர்களான அவர்கள் இருவரும் ஆடாதது அந்த அணிக்கு பெரிய இழப்பு. அதிலும் ரெய்னா, சிஎஸ்கேவின் மேட்ச் வின்னர். அவர் ஆடாதது சிஎஸ்கேவிற்கு பெரும் பாதிப்பு.

ஆனாலும் அவர்களுக்கு மாற்று வீரர்களை கூட அறிவிக்காமல், இருக்கும் வீரர்களை வைத்தே கோப்பையை தூக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே உள்ளது.

இந்நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே கண்டிப்பாக கோப்பையை வெல்லாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், சிஎஸ்கே அணியில் எப்போதுமே அதிகமான சீனியர் வீரர்கள் இருக்கின்றனர். அதனால் தான் சிஎஸ்கே “Dad’s Army” என்று அழைக்கப்படுகிறது. அந்தளவிற்கு ஏகப்பட்ட சீனியர் வீரர்கள் உள்ளனர்.

ஒரு அணி என்பது இளமையும் அனுபவமும் கலந்த அணியாக இருக்க வேண்டும். அப்போதுதான், அந்த அணி வலுவாக இருக்கும். சிஎஸ்கேவில் முழுக்க முழுக்க சீனியர்கள் மட்டுமே உள்ளனர். அந்த அணியில் எந்த இளம் வீரர்களின் எனர்ஜி மொத்த அணியையும் உயர்த்தும்? அப்படியான இளம் வீரர்களே கிடையாது. அதுதான் அந்த அணியின் பலவீனம். எனவே ஐபிஎல் 2020ல் சிஎஸ்கே டைட்டிலை வெல்ல வாய்ப்பில்லை.

மேலும் சிஎஸ்கே அணியின் இன்னொரு பலவீனம், ரெய்னாவும் ஹர்பஜன் சிங்கும் இந்த சீசனில் ஆடாதது. அவர்கள் இருவரும் மிகுந்த அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்கள். அணியின் 2 முக்கியமான வீரர்களை இழந்திருக்கிறது சிஎஸ்கே. அவர்களின் இடத்தை நிரப்புவது மிகக்கடினம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

click me!