அபாயத்தில் சீனியர் வீரர்.. அச்சுறுத்தும் கவாஸ்கர்.. இன்னும் 2 மேட்ச் சொதப்புனா ஆளு காலி

By karthikeyan VFirst Published Nov 5, 2019, 5:09 PM IST
Highlights

தவானின் மந்தமான பேட்டிங் தொடருமேயேனால் இந்திய அணியில் அவருக்கான இடம் கேள்விக்குறியாகும் அபாயம் எழுந்துள்ளது. 
 

தவான் பொதுவாகவே பெரிய இன்னிங்ஸ் ஆடமாட்டார். ஒருநாள் போட்டிகள் என்றால் சதம், 150 என்ற ரேஞ்சுக்கு ஆடமாட்டார். அதே டி20 போட்டியென்றால், 80-100 ரேஞ்சுக்கு ஆடமாட்டார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சம் 70-80 ரன்கள் தான் அவரது சராசரி அதிகபட்ச ஸ்கோர். கிடைக்கும் நல்ல ஸ்டார்ட்டை ரோஹித் சர்மாவை போல் பெரிய இன்னிங்ஸாக மாற்றமாட்டார். டி20யிலும் அப்படித்தான். 

நிதானமாக தொடங்கினால் அதை ஈடுகட்டிவிட்டும் செல்லமாட்டார். ஐபிஎல்லிலும் அவர் இப்படித்தான் ஆடினார். அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்திவிட்டு செல்லமாட்டார். 45 பந்துகள் பேட்டிங் ஆடுகிறார் என்றால் 40-50 ரன்கள் அடித்துவிட்டு செல்வார். இப்படி அடிப்பதால் அது அணிக்கு எந்தவிதத்திலும் உதவாது. 45 பந்துகள் பேட்டிங் ஆடினால் குறைந்தது 60-65 ரன்கள் அடித்தால்தான் டி20 கிரிக்கெட்டில், அது அணிக்கு உதவிகரமாக அமையும். இல்லையெனில் வேஸ்ட். 

திறமையான இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில், தனது இடத்தை தக்கவைக்க அபாரமாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் சீனியர் வீரர்கள் உள்ளனர். ரோஹித், கோலி ஆகியோரது லெவலே வேறு. எனவே அவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் தவான் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள சிறப்பாக ஆடியாக வேண்டும். அவரது ஸ்டிரைக் ரேட்டை உயர்த்துவதற்கு அவர் கண்டிப்பாக உழைக்க வேண்டும். 

சமீபகாலமாக தவானின் ஆட்டம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கூட, களத்தில் நிலைக்க போதுமான நேரத்தையும் பந்துகளையும் எடுத்துக்கொண்ட தவான், நிலைத்த பின்னர் அதிரடியாக ஆடி அணிக்கு பலனளிக்கும் விதமாக எதையும் செய்யாமலேயே அவுட்டாகிவிட்டார். 42 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர்தான் அந்த போட்டியில் அதிகமான ரன் அடித்த வீரர் என்றாலும், அதனால் அணிக்கு எந்த பலனும் கிடைக்காமல் போனது. 

இந்நிலையில், தவான் எஞ்சிய 2 போட்டிகளிலும் சரியாக ஆடியாக வேண்டும். இல்லையெனில் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், வங்கதேசத்துக்கு எதிரான எஞ்சிய 2 போட்டிகளில் ஷிகர் தவான் சரியாக ஆடவில்லையெனில் கேள்விகள் எழும். 40-45 பந்துகள் பேட்டிங் ஆடி அதே அளவிற்கு ரன் அடித்தால் அது அணிக்கு எந்தவிதத்திலும் உதவாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!