ஸ்டெய்னின் கையில் இருந்து தவறிய பந்தைக்கூட, விடாமல் விரட்டி அடித்த ஸ்மித்.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 22, 2020, 5:07 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்டெய்னின் கையில் இருந்து தவறிய பந்தைக்கூட விடாமல் ஸ்மித் விரட்டியடித்தார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது. 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது. 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. 

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 196 ரன்களை குவித்தது. 197 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணியை அஷ்டன் அகரின் அபாரமான பவுலிங்கால் 89 ரன்களில் சுருட்டிய ஆஸ்திரேலிய அணி, 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அஷ்டன் அகர் ஹாட்ரிக் விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் 9 பந்தில் 20 ரன்களை அடித்த அகர் தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

ஸ்மித்தும் ஃபின்ச்சும் அதிரடியாக ஆடி அமைத்து கொடுத்த அடித்தளத்தால்தான் ஆஸ்திரேலிய அணி 196 ரன்களை எட்டியது. ஃபின்ச் 27 பந்தில் 42 ரன்களையும் ஸ்மித் 32 பந்தில் 45 ரன்களையும் அடித்தனர். 

ஸ்டெய்ன் வீசிய 3வது ஓவரின் நான்காவது பந்து அவர் வீசுவதற்கு முன்பாக, அவர் பந்து வீச ஜம்ப் செய்யும்போது காதில் கை பட்டதன் விளைவாக பந்து அவரது கையைவிட்டு சென்றது. அந்த பந்து ஆடுகளத்தில் 2 முறை பிட்ச் ஆனது. ஆனால் அதைக்கூட விடாமல் ஸ்மித் இறங்கி வந்து பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த வீடியோ இதோ..

Dale with the Hadeda delivery pic.twitter.com/YHsFCOazdA

— Harry The Hadeda (@hadedaharry)
click me!