பால் ஆடம்ஸின் வலது கை வெர்சன்.. இணையத்தை கலக்கும் இலங்கை பவுலர்.. வீடியோ

Published : Nov 19, 2019, 11:13 AM IST
பால் ஆடம்ஸின் வலது கை வெர்சன்.. இணையத்தை கலக்கும் இலங்கை பவுலர்.. வீடியோ

சுருக்கம்

கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வழக்கமான ஆட்ட முறையை பின்பற்றும் வீரர்கள் மற்றும் வித்தியாசமான ஆட்ட முறையை கொண்ட வீரர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.   

சமகால கிரிக்கெட்டில், பாரம்பரியமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர் விராட் கோலி. ஆனால் அவருக்கு நிகரான தலைசிறந்த வீரராக திகழும் ஸ்மித், முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். ஆனால் இருவருமே மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கிறார்கள்.

அதேபோல பவுலர்களில் மெக்ராத், வாசிம் அக்ரம், வால்ஷ், ஷேன் வார்னே ஆகியோர் வழக்கமான பவுலிங் ஆக்‌ஷனை கொண்ட பவுலர்கள். மலிங்கா, முரளிதரன், தன்வீர் ஆகியோர் வரிசையில் தற்போது பும்ரா வரை பல பவுலர்கள் வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை கொண்டவர்கள். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஸ்பின்னர் பால் ஆடம்ஸ் இவர்களையெல்லாம் விட முற்றிலும் வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை கொண்டவர். 

பால் ஆடம்ஸின் பவுலிங்கை அப்படியே பிரதிபலிக்கிறார் இலங்கை வீரர் கெவின் கொத்திகோடா. பால் ஆடம்ஸ் இடது கை ஸ்பின்னர். அவரது பவுலிங் அப்படியே வலது கை பவுலிங்கில் பிரதிபலிக்கிறார் இந்த கொத்திகோடா. 

டி10 லீக்கில் பங்களா டைகர்ஸ் அணியில் ஆடிவருகிறார். கர்நாடகா டஸ்கர்ஸ் மற்றும் டெல்லி புல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அவரது வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?