அக்தரின் அதிவேக பவுலிங் ரெக்கார்டை அந்த இந்திய பவுலரால் முறியடிக்க முடியும்.. ஸ்ரீசாந்த் நம்பிக்கை

By karthikeyan VFirst Published May 13, 2020, 3:37 PM IST
Highlights

ஷோயப் அக்தரின் அதிவேக பவுலிங் ரெக்கார்டை எந்த பவுலரால் முறியடிக்க முடியும் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
 

பாகிஸ்தான் அணி நிறைய தரமான, மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களை கிரிக்கெட்டுக்கு அளித்துள்ளது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது அமீர் என ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சகாப்தங்கள். ஜூனைத் கான், வஹாப் ரியாஸ், முகமது சமி ஆகியோரும் பாகிஸ்தானின் சிறந்த பவுலர்களாக திகழ்ந்தவர்கள்.

வாசிம் அக்ரமிற்கு பிறகு பாகிஸ்தானுக்கு கிடைத்த பொக்கிஷம் அக்தர். பவுண்டரி லைனிற்கு அருகில் இருந்து அவர் ஓடிவரும் வேகம், அவரது தோற்றம், அவர் பவுலிங் வீசும் முறை என அனைத்துமே மிரட்டலுமே இருக்கும். அவரது பவுலிங் அதைவிட மிரட்டலாக இருக்கும். அவரது காலக்கட்டத்தில் ஆடிய தலைசிறந்த பேட்ஸ்மேன்களான பிரயன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா, சங்கக்கரா ஆகியோரை தனது வேகத்தால் மிரட்டியுள்ளார். 

அசால்ட்டாக 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசும் அக்தர் அதிகபட்சமாக 2003 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 கிமீ வேகத்தில் வீசி சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அதுதான் ஒரு ஃபாஸ்ட் பவுலர் வீசிய அதிவேக பந்து. அந்த ரெக்கார்டை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. பிரெட் லீ, டேல் ஸ்டெய்ன், மிட்செல் ஸ்டார்க், ஷான் டைட் ஆகியோர் 160 கிமீ வேகம் வரை வீசியிருக்கிறார்கள். ஆனால் அக்தரின் ரெக்கார்டை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. அக்தரின் அதிவேக பவுலிங்கால் அவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படுகிறார். 

இதுவரை அக்தரின் அதிவேக பவுலிங் ரெக்கார்டை யாரும் முறியடிக்காத நிலையில், அதை யாரால் முறியடிக்க முடியும் என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ஹெலோ ஆப்பிற்கு லைவில் பேட்டியளித்த ஸ்ரீசாந்த்திடம் இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஸ்ரீசாந்த், மிட்செல் ஸ்டார்க் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவராலும் அக்தரின் 161.3 கிமீ வேகத்திற்கு மேல் வீசி அக்தரின் ரெக்கார்டை முறியடிக்க முடியும் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 
 

click me!