ரசிகரின் கஷ்டமான கேள்விக்கு ஈசியா அசத்தலான பதிலளித்த கோலி

By karthikeyan VFirst Published May 11, 2020, 2:36 PM IST
Highlights

விராட் கோலியிடம் இளம் ரசிகர் ஒருவர் கேட்ட கஷ்டமான கேள்விக்கு, பெரும் சிரத்தை எடுக்காமல் எளிமையாக பதிலளித்தார் விராட் கோலி.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்பவர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். அவரது கெரியர் முடிவதற்கு, சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டின் ஜாம்பவனாக வலம்வரும் விராட் கோலியிடம், ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் ஷோவில், இளம் ரசிகர் ஒருவர், விராட் கோலியிடம், நீங்கள் ஆடியதிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த, மனதிற்கு நெருக்கமான போட்டி எது(2011 உலக கோப்பை ஃபைனலை தவிர) என்று கேட்டார். 

இந்திய அணிக்காக விராட் கோலி 70 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். சதமடிக்காமல், சிறப்பான பல இன்னிங்ஸ்களின் மூலமும் இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அணிக்காக அவர் தேடிக்கொடுத்த ஒவ்வொரு வெற்றியும், அதற்காக அவர் ஆடிய ஒவ்வொரு இன்னிங்ஸுமே அவருக்கு சிறப்பானதுதான். ஆனாலும் அவருக்கு மிகவும் பிடித்த போட்டி எது என்ற கேள்வி சற்று கஷ்டமானதுதான். 

ஆனால், அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த விராட் கோலி, 2011 உலக கோப்பை ஃபைனலை தவிர எனக்கு மிகவும் பிடித்த போட்டி என்றால், 2016 டி20 உலக கோப்பையில் சூப்பர் 10 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் நடந்த போட்டிதான். போட்டியின் முக்கியத்துவம் மற்றும் சூழலின் அடிப்படையில், அந்த போட்டிதான் எனக்கு மிகவும் பிடித்த போட்டி என்றார் கோலி. 

கோலி குறிப்பிட்ட அந்த போட்டியில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மொஹாலியில் மோதின. அதில் வென்றால்தான் இந்திய அணி காலிறுதிக்கு தகுதிபெற முடியும் என்பதால் வெற்றி கட்டாயத்துடன் இந்திய அணி அந்த போட்டியில் களமிறங்கியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 160 ரன்கள் அடித்தது. 

161 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி, 14 ஓவரில் வெறும் 94 ரன்கள் மட்டுமே அடித்து 4 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. அந்த போட்டியில் ரோஹித் சர்மா, தவான், ரெய்னா, யுவராஜ் ஆகியோர் சரியாக ஆடவில்லை. ஆனால் ஒருமுனையில் கோலி மட்டும் நிலைத்து நின்றார்.

கடைசி 6 ஓவரில் 67 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதிரடியாக ஆடி 51 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 82 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் கோலி. கோலியின் அதிரடியான பேட்டிங்கால் அந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, காலிறுதிக்கு முன்னேறியது. அதன்பின்னர் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்று தொடரை விட்டு இந்திய அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

click me!