IND vs SA: முதல் டி20 டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் சீனியர் வீரர் கம்பேக்.! தேங்க்ஸ் டூ ஐபிஎல்

Published : Jun 09, 2022, 06:59 PM IST
IND vs SA: முதல் டி20 டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் சீனியர் வீரர் கம்பேக்.! தேங்க்ஸ் டூ ஐபிஎல்

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் முதல் டி20 போட்டி நடக்கிறது. 

இந்த தொடரில் கேப்டனாக செயல்படவிருந்த கேஎல் ராகுல், காயம் காரணமாக கடைசி நேரத்தில் அணியிலிருந்து விலக, ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் உம்ரான் மாலிக் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அணியில் எடுக்கப்படவில்லை. 

எதிர்பார்த்ததை போலவே, ஐபிஎல்லில் அசத்திய தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் கம்பேக் சான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் ஆகிய மூவரும் ஆடுகின்றனர். ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் ஆடுகின்றனர்.

இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.

ஐபிஎல்லில் மும்பை அணிக்காக ஆடிய டிரிஸ்டான் ஸ்டப்ஸ் தென்னாப்பிரிக்க அணியில் அறிமுகமாகியுள்ளார். 

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வெய்ன் பர்னெல், ட்வைன் பிரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!